விஜயுடன் ஸ்ருதிஹாசன்

கத்திபடத்தை தொடர்ந்து, சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கஉள்ளார், விஜய். 

இந்த படத்தில், விஜயுடன், பிரியங்கா சோப்ரா அல்லது தீபிகா படுகோனேவை நாயகியாக்கும் முயற்சிகள் நடந்தன. ஆனால், இந்த இரண்டு நடிகைகளும் கேட்ட சம்பள தொகை, படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக இருந்ததாம். அதனால், இப்போது, ஸ்ருதி ஹாசனிடம் பேசியுள்ளனர். ஸ்ருதி, சமீபகாலமாக, தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம்காட்டுவதால், விஜய் படத்திற்கு கண்டிப்பாக, கால்ஷீட் கொடுப்பார் என்றே தெரிகிறது.