யுஜிசி நெட் தேர்வு முடிவு வெளியானது

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் 2013 டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) முடிவு நேற்று வெளியிடப்பட்டது.


கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்குமான இந்தத் தகுதித் தேர்வு ஜூன், டிசம்பர் என ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது.

இதில் 2013 டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவு www.ugc.ac.in இணையதளத்தில் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.