எத்திகல் வோர்ம் பற்றி தெரியுமா?

Worm என்ற பெயர் இது வைரஸின் ஒரு பிரிவாக இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பலாம். 


இது தீமை விளைவிக்கும் புரோகிராம் அல்ல. இதன் செயல்படும் தன்மை, வைரஸ் ஒன்றின் செயல்பாட்டின் சாயலை ஒத்திருப்பதால், இந்த பெயர் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புரோகிராம், நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களைத் தேடி, அவற்றில் ஏதேனும் ஒரு சாப்ட்வேர் அப்டேட் செய்யப்பட வேண்டியதிருந்தால், பயனாளருக்குத் தெரியாமலேயே அதனை அப்டேட் செய்திடும். அதே போல பிழைக் குறியீடுகளுக்கான பேட்ச் பைல் டவுண்லோட் செய்து அமைக்கப்படாமல் இருந்தால், அதனையும் இயக்கி வைக்கும்.