இசை கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

நமது மனதைக் குளிர்விக்கும் இசைக்கும், இதன் கலைஞர்களுக்கும் முறையான பணி வாய்ப்பு என்பது எப்போதாவதுதான் வழங்கப்படுகிறது. இது போன்றதொரு அரிய வாய்ப்பை இந்திய கப்பல் படை வழங்குவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 
இந்திய கப்பல் படையில் செய்லர் பிரிவில் இசைக் கலைஞர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. திருமணம் ஆகாத ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
வயது: இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.10.1993க்குப் பின்னரும் 30.09.1997க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 10ம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இசை தொடர்புடைய தேவை என்ன?: தகுதி அடிப்படையில் இசைத் தகுதி தீர்மானிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் வெஸ்டர்ன் நொடேஷன்களை வாசிக்கும் திறன், ஆரல் ஆப்டியூடு, இசை குறித்த அடிப்படைகளை அறிந்திருத்தல் போன்ற திறன் பெற்றவராக இருக்க வேண்டும். வெஸ்டர்ன் கிளாசிகல் மியூசிக் மற்றும் விண்ட்/பெர்குசன் வாத்தியங்களில் செய்முறைப் பயிற்சியுடையவராகவும் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: இசைத்தகுதித் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவப் பரிசோதனை என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பப் படிவத்தை முழுமையாக நிரப்பி பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Commanding Officer, (for Director of Music), INS Kunjali, Colaba, Mumbai-400 005.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.05.2014
இணையதள முகவரி: http://www.nausena-bharti.nic.in/