"கத்தி" திரைப்படத்தில் விஜய் யாரு?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, சதீஷ் நடிக்கும் படம் 'கத்தி'. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இதுவரை நான்கு பாடல்களுக்கு இசையமைத்துக் கொடுத்து, விஜய்யின் பார்ராட்டிஅப் பெற்றுள்ளார்.

'கத்தி' படத்தில் விஜய் டபுள் ரோலில் நடிக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும், அதில் ஒரு விஜய் கொல்கத்தாவில் துப்பறியும் நிபுணராக வருகிறாராம். இவருக்கு வில்லனாக இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ் நடிக்கிறார்.


நீல் நிதின் முகேஷ் போடும் வன்முறை திட்டங்கள் அனைத்தையும் விஜய் முறியடிக்கிறாராம், ஆனால்  இவை எல்லாவற்றுக்கும் காரணம் இன்னொரு விஜய் என்று பின்பு தான் தெரிகிறது.

விஜய்க்கு வில்லனாக வருவது இன்னொரு விஜய் தான்.இது ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையுமாம்.'அழகிய தமிழ்மகன்' படத்தில் விட்ட இமேஜை இதில் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருக்கிறாராம் விஜய். 

இதில் ஹீரோ விஜய்க்கு ஜோடியாக சமந்தா முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார், கூடுதல் தகவல் ஒன்றும் வந்துள்ளது. வில்லன் விஜய்க்கும் படத்தில் ஜோடி உள்ளதாம்.  

ஹீரோ விஜய் அரவிந்த் என்ற பெயரிலும், வில்லன் விஜய் ஆண்ட்ரூ என்ற பெயரிலும் நடிக்கிறார்கள்.  சமந்தா வேணியாகவும், சதீஷ் தாணுவாகவும் நடிக்கிறார்.