இங்கிலாந்தில் "கத்தி" இசை

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா முதல் முதலாக இணைந்து நடிக்கும் படம் கத்தி. இப்படத்தின் படபிடிப்பு இப்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இளம் இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்கிறார். ஏற்கனவே மூன்று பாடல்களை முடித்து கொடுத்த அனிருத் தற்போது நான்காவது பாடலுக்கும் இசை அமைத்து முடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளன. துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் என்ற பாடலையும், ஜில்லா படத்தில் கண்டாங்கி கண்டாங்கி என்ற பாடலை பாடிய விஜய் இந்த படத்திலும் ஒரு பாடல் பாட உள்ளார். இதை தவுர ஒரு தீம் மியூசிக் உள்ளது.
இதன் இசை வெளியீட்டு விழாவை இங்கிலாந்தில் பிரம்மாண்டமாக நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை சன் பிக்சர்ஸ் உலகம் முழுக்க வெளியீடுகிறது, படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.