அஜித் பிறந்தநாள் திட்டம்

1.அமர்க்களம்
அன்றைக்கு அஜித் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அஜித்தின் 25வது படமான அமர்க்களம் படத்தை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் வெளியிடுகின்றனர். 
தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறதாம்.
2.ஆரம்பம்
டி வி சேனல்கள் மட்டும் சும்மா இருக்குமா... அஜீத் பிறந்த நாள் ஸ்பெஷலாக ஜெயா டிவி ஆரம்பம் படத்தை ஒளிபரப்புகிறது. கடந்த தீபாவளிக்கு வந்த படம் இது. அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி நடித்திருந்தனர்.
3.வீரம்
ஜெயாவுக்குப் போட்டியாக ஆரம்பத்தை விட புதிய படமான வீரம் படத்தைத் திரையிடவிருக்கிறது சன் டிவி. இந்தப் படத்தில் தமன்னா அஜீத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். கடந்த பொங்கலுக்கு வெளியான படம் இது.
4.புதுப்பட போஸ்டர்(thala55)
இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி மே 1ந் தேதி கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிடவிருக்கிறார்களாம்.