மிரட்ட துடிக்கும் லட்சுமி மேனன்

நான் சிகப்பு மனிதன் படத்துக்குப்பிறகு முத்தக்காட்சி நடிகையாகி விட்டார் லடசுமிமேனன். அதனால் அவர் பற்றிய பரபரப்பு பேச்சுகளுக்கும் பஞ்சமில்லை. இந்த பொண்ணையும் இப்படி மாத்திட்டாங்களா என்று சிலர் சொன்னாலும், இப்பத்தான் முழு நடிகையாகியிருக்கிறார் லட்சுமிமேனன் என்று கோடம்பாக்க டைரக்டர்கள் பாராட்டி வருகின்றனர். இதனால் அவரைத்தேடி இப்போது பெரிய பட்ஜெட் படங்களும் செனறு கொண்டிருக்கின்றன.
இந்த நேரத்தில், இதுவரை நான் நிறைய கண்டிசன் போட்டிருக்கிறேன். ஆனால் இனி அப்படியெல்லாம் செய்யப்போவதில்லை. கிளாமர் விசயத்தில்கூட இனி ஓவர் கட்டுப்பாடு இல்லை. ஓரளவு விட்டுக்கொடுப்பேன். அதேசமயம், எனக்கான வேடங்கள் டம்மியாக இருக்கக்கூடாது. வெயிட்டான கதாபாத்திரமாக இருக்க வேண்டும்.
சித்தார்த், விஷால் என முன்னணி ஹீரோக்களுடனெல்லாம் நடித்து விட்டேன. அதனால் இனி பர்பாமென்ஸ் ரீதியாக எத்தனை பெரிய ஹீரோக்களுக்கு எதிராக நின்றும் தில்லாக நடிக்க முடியும் என்ற மனத்தைரியம் எனக்கு ஏறபட்டு விட்டது. குறிப்பாக படையப்பாவில் ரஜினிக்கே சவால் விடும் வகையில் ரம்யா கிருஷ்ணன் நடித்தது போன்று நடிக்க ஆசைப்படுகிறேன். அதனால் அந்த மாதிரி அதிரிபுதிரியான கதைகளுடன் வாருங்கள் என்று தன்னை முற்றுகையிட்ட சில டைரக்டர்களிடம் சொல்லி அதிர்ச்சி கொடுத்து விட்டார் லட்சுமிமேனன்.
அதனால், இனி அவரை கவர்ச்சி, முத்தக்காட்சி என்று கில்மா நடிகையாக்கி விட வேண்டியது தான் என்று கதை பண்ணிக்கொண்டு முற்றுகையிட்ட இயக்குனர்கள், அவரது இந்த திடீர் மாற்றத்தினால் மீண்டும் கதையில திருத்தம் செய்து கொண்டிருக்கின்றனர்.