அஜித்துக்கு வில்லனாகும் அருண்விஜய், அரவிந்த்சாமி ?

  

வீரம் படத்திற்குப் பிறகு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கிறார். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. அனுஷ்கா, எமி ஜாக்சன் ஆகியோர் ஹீரோயினாக நடிக்கின்றனர். ஹாரீஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதெல்லாம் ஏற்கெனவே தெரிந்த விஷயம்.


இப்போது அஜித்தின் வில்லனாக நடிக்கப்போவது யார் என்ற ஒற்றைக் கேள்விக்கு இரண்டு பதில்கள் வந்திருக்கிறது. ஆம் படத்தில் அஜித்திற்கு இரண்டு வில்லன்கள்.
அருண்விஜய் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோரை வில்லனாக்கலாமா என்ற பேச்சுவார்த்தையில் இருக்கிறதாம் படக்குழு. இதுவரை  வில்ல முகம் காட்டாத இருவர் அஜித்துடம் மோதினால் நன்றாக இருக்குமே என்பது தான் பேச்சுவார்த்தைக்கான காரணம்.
விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.