இந்திய விமானப் படையில் குரூப் "Y" பணிகள்

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள குரூப் "Y" பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளைச் சார்ந்த திருமணம் ஆகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு: 01.02.1994 முதல் 31.05.1997க்குள் பிறந்தவர்கள் இப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கல்வித் தகுதி: +2-க்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். வொகேஷனல் படிப்பை முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூர், நீலகிரி, கோவை, திருவள்ளூர், சேலம், வேலூர், ராமநாதபுரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, கரூர், நாகப்பட்டிணம், திருவாரூர் மற்றும் அரியலூர் போன்ற மாவட்டங்களும், அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே இப்பகுதியில் வசிப்பதற்கான வசிப்பதற்கான சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.

தகுதித் தேர்வு நடைபெறும் தேதி: 23.03.2014

மேலும் முழுமையான விபரங்கள் அறியhttp://indianairforce.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.