இந்திய அணி அபார வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டுவென்டி-20′ உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.வங்கதேசத்தில், 5வது டுவென்டி-20′ உலக கோப்பை தொடர் நடக்கிறது. 




மிர்புரில் இன்று நடக்கும் பிரிவு-2′ லீக் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை சந்தித்தது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பெய்லி பவுலிங்தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் தவான், ஷமி நீக்கப்பட்டு ரகானே, மோகித் சர்மா 
வாய்ப்பு பெற்றனர்.
இந்திய அணிக்கு ரோகித் சர்மா (5) சொதப்பினார். ரகானே (19), கோஹ்லி (23) அதிக நேரம் நீடிக்கவில்லை. ரெய்னா (6) ஏமாற்றினார். பின் இணைந்த கேப்டன் தோனி, யுவராஜ் ஜோடி சிறப்பாக விளையாடியது. யுவராஜ் அரை சதம் அடித்தார். தோனி 24 ரன்களில் அவுட்டானார். ஜடேஜா டக்-அவுட் ஆனார். யுவராஜ் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். இ்ந்திய அணி20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. அ்ஷ்வின் (2), புவனேஷ்வர் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆஸ்திரேலிய அணிக்கு அஷ்வின் சுழலில் பின்ச் (6), வார்னர் (19) சிக்கினர். ஒயிட் டக்அவுட் ஆனார். வாட்சன் 1 ரன்னில் வௌியேறினார். மேக்ஸ்வெல் (23) ஆறுதல் தந்தார். பெய்லி (8) ஜடேஜாவிடம் சிக்கினார்.மிஸ்ரா பந்தில் ஹாட்ஜ் (13), ஹாடின் (6) பெவிலிய்ன் திரும்பினர். பின் வந்தவர்களும் சொதப்ப, ஆஸ்திரேலிய அணி 16.2 ஓவரில், 86 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அஷ்வின் 4 விக்கெட் வீழ்த்தினார்.
S