நினைத்தது நடைபெற மந்திரம்

பல தருணங்களில் நாம் நன்கு திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் கூட தடை, தாமதங்களால் மனச் சங்கடங்களை உண்டாக்கும். எல்லாவழிகளும் அடைபட்டு, உதவி செய்ய ஒருவரும் இனி இல்லை என்ற மன அழுத்தம் உண்டாகும் தருணங்களில் நமக்கு உதவக் கூடிய ஒரு மந்திரத்தை ‘ஸ்ரீ கணேச புராணம்’ குறிப்பிட்டுக் காட்டுகிறது. அந்த மந்திரம்:–

‘ஓம் வக்ர துண்டாய ஹம்’.

சூழ்நிலைகளில் உள்ள எதிர்மறை சக்திகளை விலக்கக் கூடியதும், விஷயங்கள் ஒருமுகமாகச் செல்லக்கூடிய அருள் வழிப்பாதையைக் காட்டக்கூடியதுமான மகத்தான சக்திநிலையின் நுட்பமான மந்திர வடிவம் இது.

பக்தி நிறைந்த இதயத்துடன் பிள்ளையாரின் சன்னிதியில் அமர்ந்து இந்த மந்திரத்தை 108 முறைகள் உச்சாடனம் செய்து, நமது பிரார்த்தனையைச் சமர்ப்பித்தால் அந்த பானை வயிற்று யானை முகத்தோன் அனைத்தையும் நாம் நினைத்தபடியே நடத்தி வைப்பான்.