பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் ஃபோன்

எஸ் மொபிலிட்டி நிறுவனம், அண்மையில், தொடக்க நிலை ஸ்மார்ட் போன் ஒன்றை Spice Smart Flo Poise Mi451 என்ற பெயரில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

அதிகபட்ச விலை ரூ.5,499 மட்டுமே. Smart Flo வரிசையில் இது வெளியாகியுள்ளது. இந்த போனின்
சிறப்பம்சங்கள்:
  • 4.5 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன்
  • 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர்
  • ஆண்ட்ராய்ட் 4.2.2. ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம்
  • இரண்டு ஜி.எஸ்.எம்.சிம் பயன்பாடு 8.7 மிமீ தடிமன், 156 கிராம் எடை
  • எல்.இ.டி. ப்ளாஷ் உடன் 3.2 எம்.பி. கேமரா 1.3 எம்பி திறனுடன் முன்புறமாக இன்னொரு கேமரா 512 எம்.பி. ராம் மெமரி, 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி நெட்வொர்க் இணைப்பிற்கு வை-பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ்.தொழில் நுட்பம் 3.5 மிமீ ஆடியோ ஜாக் எப்.எம். ரேடியோ 1,450 mAh திறன் கொண்ட பேட்டரி இந்த போனுடன் ப்ளாப் கவர் மற்றும் உயர் ரக இயர் போன் தரப்படுகிறது.